குமாரபாளையம் காளியம்மன்- மாரியம்மன் கோவிலின் மறு பூச்சாட்டு திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தமிழகத்திலேயே எங்கும் இல்லாத வகையில் கருவறைக்குள் சென்று பெண்பக்தர்களே நேரடியாக அம்மனுக்கு அபிஷேகம் செய்யும் நிகழ்ச்சி நள்ளிரவில் தொடங்கியது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு காவல் தெய்வமாக விளங்கும் புகழ்பெற்ற காளியம்மன்- மாரியம்மன் திருக்கோவில் உள்ளது. இத்திருக்கோவிலின் திருவிழா ஆண்டுதோறும் மாசி மாதம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திருவிழா கடந்த 14-ஆம் தேதி பூச்சாற்றுடன் தொடங்கி அதனை தொடர்ந்து தினசரி சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தமிழகத்தில் எங்கும் இல்லாத வகையில் கருவறையில் சென்று பெண்களை நேரடியாக அம்மனுக்கு அபிஷேகம் செய்யும் நிகழ்ச்சி நள்ளிரவில் தொடங்கியது. தொடர்ந்து ஆயிரக்கணக்கான பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து கருவறைக்குள் சென்று பால், தயிர் இளநீர், மஞ்சள் மற்றும் நாணயங்கள் உள்ளிட்ட பொருட்கள் கொண்டு அம்மனுக்கு அபிஷேகம் செய்து வருகின்றனர்.
இதனை தொடர்ந்து நாளை குமாரபாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்தஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ளும் தீமிதி திருவிழா மிக விமர்சையாக நடைபெற உள்ளது.
- பி. ஜேம்ஸ் லிசா








