திருஇந்தளூர் சிவன் கோயிலில் ஆடி 2-வது வெள்ளி: அம்மனுக்கு பிஸ்கட் பாக்கெட்டுகளால் அலங்காரம்!

மயிலாடுதுறை திருஇந்தளூர் அருகே உள்ள சிவன் கோயிலில், ஆடி மாத 2வது வெள்ளியை முன்னிட்டு அஷ்டபூஜ சுகந்தவன காளிக்கு பிஸ்கட் பாக்கெட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மயிலாடுதுறை அருகே திருஇந்தளூர் வடக்கு தெருவில்…

மயிலாடுதுறை திருஇந்தளூர் அருகே உள்ள சிவன் கோயிலில், ஆடி மாத 2வது வெள்ளியை முன்னிட்டு அஷ்டபூஜ சுகந்தவன காளிக்கு பிஸ்கட் பாக்கெட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

மயிலாடுதுறை அருகே திருஇந்தளூர் வடக்கு தெருவில் சிவன் கோயில் உள்ளது. ஆடி மாத 2வது வெள்ளியை முன்னிட்டு இவ்வாலயத்தில் தனி சன்னதியில் அமைந்துள்ள அஷ்டபூஜ சுகந்தவன காளிக்கு பிஸ்கட் அலங்காரம் செய்து வழிபாடு மேற்கொள்ளப்பட்டது.

பின்னா் பிஸ்கட் பாக்கெட்டுகளை மாலை போன்று தயாரித்து அதனை சுகந்தவன காளிக்கு சாத்தப்பட்டு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மேலும் பக்தர்களுக்கு பிஸ்கட் பாக்கெட்டுகள் பிரசாதமாக வழங்கப்பட்டது. மேலும் ஏராளமான பக்தர்கள் ஆச்சரியத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.

ரூபி.காமராஜ்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.