ஹைதராபாத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து – 9 பேர் பலி!

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீபத்தில்  9 பேர் உயிரிழந்துள்ளனர். தெலங்கான மாநிலம் ஹைதராபாத் நம்பள்ளி நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் தரைத்தளத்தில் ரசாயன பொருட்கள் விற்பனை செய்யும்…

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீபத்தில்  9 பேர் உயிரிழந்துள்ளனர்.

தெலங்கான மாநிலம் ஹைதராபாத் நம்பள்ளி நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் தரைத்தளத்தில் ரசாயன பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தின் கிடங்கு உள்ளது.
அதன் அருகே இருந்த மெக்கானிக் செட்டில் வெல்டிங் செய்து கொண்டிருந்த போது திடீரென தீ விபத்து ஏற்பட்டு ரசாயனக் கிடங்கிற்கும் பரவியது.

இந்த தீ விபத்தில் இதுவரை 9 பேர் உயிர்ழந்தனர். மேலும் 10ம் மேற்பட்டோர் பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.  அந்த அடுக்குமாடி குடியிருப்பில் சுமார் 80க்கும் மேற்பட்டோர் வசித்து வருவதால்,  தீ விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் அங்கு சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

தீயணைப்பு துறையினரால் பெரும்பாலானோர் மீட்கப்பட்டுள்ள நிலையில், மேலும் சிலர் அங்கு சிக்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதால் தீயணைப்பு வீரர்கள் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படியுங்கள்: “சத்தீஸ்கரில் காங்கிரஸின் மோசமான ஆட்சிக்கு முடிவு கட்டும் நேரம் வந்துவிட்டது” – பிரதமர் மோடி உரை

படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில்
சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  இந்த தீ விபத்து குறித்து காவல்துறையினர் தீவர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.