சென்னையில் நாட்டு வெடிகுண்டு வீசிய சம்பவம்!! போலீசார் தீவிர விசாரணை

சென்னை விருகம்பாக்கத்தில் சாலையோரம் உள்ள கடை முன்பு நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை விருகம்பாக்கம் பெரியார் நகர் பகுதியில் நேற்று நள்ளிரவு சாலையோரம் இருந்த பஞ்சர் கடை முன்பு…

சென்னை விருகம்பாக்கத்தில் சாலையோரம் உள்ள கடை முன்பு நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை விருகம்பாக்கம் பெரியார் நகர் பகுதியில் நேற்று நள்ளிரவு சாலையோரம் இருந்த பஞ்சர் கடை முன்பு சில மர்ம நபர்கள் வெடிகுண்டை வீசி சென்றுள்ளனர். இதனால் அப்பகுதி முழுவதும் பயங்கர சத்தம் கேட்டுள்ளது. இரவு நேரம் என்பதால் சாலையில் மக்கள் நடமாட்டம் இல்லாத காரணத்தினால், நல்வாய்ப்பாக யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

சாலையோரம் இருந்த பஞ்சர் கடையின் முன்பு நாட்டு வெடி குண்டு வீசப்பட்டதால்,அந்த கடையில் இருந்த டியூப் லைட் மற்றும் இதர பொருட்கள் மட்டும் சேதம் அடைந்துள்ளது. இது தொடர்பாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற விருகம்பாக்கம் போலீசார் , இந்த நாட்டு வெடி குண்டு வீசிய மர்ம நபர்கள் யார் என்றும், இவர்கள் யார் மீது வீசுவதற்காக வந்தனர் என்பது குறித்து சிசிடிவி காட்சிகள் கொண்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.