அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த 310 தொழிலாளர்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதி – எடப்பாடி பழனிசாமி வழங்கினார்

மே தினத்தையொட்டி அண்ணா தொழிற்சங்கத்தை சார்ந்த நலிவடைந்த தொழிலாளர்கள் 310 பேருக்கு தலா ரூ.1 லட்சம் குடும்ப நல உதவியை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார் ஒவ்வொரு ஆண்டும் மே தினத்தை…

மே தினத்தையொட்டி அண்ணா தொழிற்சங்கத்தை சார்ந்த நலிவடைந்த தொழிலாளர்கள் 310 பேருக்கு தலா ரூ.1 லட்சம் குடும்ப நல உதவியை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்

ஒவ்வொரு ஆண்டும் மே தினத்தை ஒட்டி அண்ணா தொழிற்சங்கம் சார்பாக நலிவடைந்த
தொழிலாளர்களுக்கு குடும்ப நல உதவி வழங்குவது வழக்கமாக இருந்து வருகிறது.
அதன்படி சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் மண்டபத்தில் அதிமுக பொதுச்
செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 310 நலிவடைந்த தொழிலாளர்களுக்கு ஒரு
லட்சத்திற்கான குடும்ப நல நிதியை வழங்கினார். இந்த நிகழ்வில் முன்னாள்அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கே பி முனுசாமி, ஜெயக்குமார், தங்கமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்வுக்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், வைத்திலிங்கத்தை ஒன்றிய செயலாளர் ஆக்கியது தான் தான் என பேசினார். வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்தபோது காசு வாங்கிவிட்டு ஒப்புதல் வழங்கிய ஊழல் வழக்கில் சிக்கி இருப்பதால் அதிலிருந்து தப்பிக்க வைத்திலிங்கம் திமுகவின் பி டீமாக மாறி இருப்பதாகவும் ஜெயக்குமார் குற்றம் சாட்டினார். மூப்பனாரை பின்னுக்கு தள்ளி, தஞ்சாவூரில் 2000 ஏக்கர் நிலங்களை வைத்திலிங்கம் வைத்திருப்பதாக கூறிய ஜெயக்குமார், தற்போது அதிமுகவில் இருந்த களைகள் எடுக்கப்பட்டு சுத்தமாக இருப்பதாகவும் கூறினார்.

சாலை விபத்து நேரில் மூழ்கி உயிரிழப்பு உள்ளிட்ட விபத்துகளில் உயிரிழப்பவர்களுக்கு 2 லட்சம் ரூபாய் கொடுக்கும் அரசு, கள்ளச்சாராயம் கொடுத்து இறந்தவர்களுக்கு 10 லட்சம்
ரூபாய் கொடுப்பதாகவும் ஜெயக்குமார் விமர்சனம் செய்தார்.

கள்ளச்சாராய குற்றவாளிக்கு 50 ஆயிரம் ரூபாய் கொடுத்து இருக்கும் அரசு தான்
தமிழ்நாட்டை தற்போது ஆட்சி செய்ததற்காகவும் ஜெயக்குமார் விமர்சனம் செய்தார்.
இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் திமுக கூட்டணியில் நீடிக்க விடுதலை சிறுத்தைகள்
கட்சித் தலைவர் தொல் திருமாவளவனுக்கு விருப்பமில்லை எனவும் அவர் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.