மதுரை அருகே கோயிலில் 500 கிலோ பிரியாணி சமைத்து அன்னதானம்!

மதுரை அருகே சூலக்கருப்பசாமி திருக்கோயில் 8-ஆம் ஆண்டு திருவிழா 25-ஆடுகள், 50-மேற்பட்ட சேவல்கள் பலியிட்டு பிரியாணி சமைத்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மதுரை மாவட்டம்,  திருமங்கலம் அருகே கள்ளிக்குடி கிராமத்தில் சூலக்கருப்பசாமி திருக்கோயில் உள்ளது. …

மதுரை அருகே சூலக்கருப்பசாமி திருக்கோயில் 8-ஆம் ஆண்டு திருவிழா 25-ஆடுகள், 50-மேற்பட்ட சேவல்கள் பலியிட்டு பிரியாணி சமைத்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மதுரை மாவட்டம்,  திருமங்கலம் அருகே கள்ளிக்குடி கிராமத்தில் சூலக்கருப்பசாமி திருக்கோயில் உள்ளது.  இங்கு 8 ஆம் ஆண்டு திருவிழா காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் கடந்த இரு தினங்களுக்கு முன்பு தொடங்கியது.

இந்நிலையில்., நேற்று இரவு சூலக்கருப்பசாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை
காண்பிக்கப்பட்டு,  கிராம பொதுமக்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். பின்னர் பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்திய 25 கிடாக்கள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட சேவல்களை பலியிட்டு 500 கிலோ அரிசியில் சுட சுட பிரியாணி சமைத்தனர்.

தொடர்ந்து,  பிரியாணியை சூலக்கருப்பசாமிக்கு படைத்து அதன் பின்பு கோயிலுக்கு வருகை தந்த பக்தர்களுக்கும் மற்றும் வடக்கம்பட்டி,  அகத்தாப்பட்டி,  ஓடைப்பட்டி, வில்லூர்,  சென்னம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம மக்களுக்கு பிரசாதமாக வழங்கினர்.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சூலக்கருப்பண்ண சாமியை வணங்கி சாமி தரிசனம் செய்தனர்.

ம. ஸ்ரீ மரகதம்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.