4 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு அண்மை காலமாகவே ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அவ்வப்போது உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்றும் ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
https://twitter.com/news7tamil/status/1706332679200014402
இந்த உத்தரவின்படி, சிறு,குறு, நடுத்தர நிறுவனங்கள் துறை செயலாளராக அர்ச்சனா பட்னாய்க் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். தொழில்துறை ஆணையர் மற்றும் இயக்குநராக நிர்மல்ராஜ் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆணையராக பூஜா குல்கர்னி ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். குடிமைப்பொருள் வழங்கல் துறை முதன்மை செயலாளர் மற்றும் ஆணையராக ஹர்ஷகே மீனா ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.







