31.5 C
Chennai
May 12, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம்

மாணவர்களின் உயர் கல்வியை ஊக்குவிக்க ‘தமிழ் புதல்வன்’ திட்டம்: ரூ.360 கோடி ஒதுக்கீடு என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு!

‘தமிழ் புதல்வன்’ திட்டத்திற்கு ரூ.360 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் இந்த திட்டத்தின் மூலம் 6-ம் வகுப்பு முதல் 12 -ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ. 1,000 வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார். 

தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த 12-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்ற நிலையில், கடந்த பிப். 15-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதிலுரையாற்றினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை “தடைகளைத் தாண்டி” எனும் தலைப்பில் முத்திரை சின்னத்துடன் அளிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, சட்டப்பேரவை கூட்டம் இன்று (பிப். 19) காலை 10 மணிக்கு கூடியது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு வருகை தந்தார். அவரை சந்தித்து நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வாழ்த்து பெற்றார். அதன்பின், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2024-25 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் உரையின் தொடக்கத்தில் காட்சிக்கு எளிமையும், கடுஞ்சொல் கூறாத இனிய பண்பாடும் உடைய அரசைத்தான் உலகம் புகழும் என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி பட்ஜெட் உரையை தொடங்கினார்.

அந்த உரையில்,  ‘தமிழ் புதல்வன்’ திட்டத்திற்கு ரூ.360 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவித்தார்.  இந்த திட்டத்தின் மூலம் 6-ம் வகுப்பு முதல் 12 -ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவர்கள்,  பாட புத்தகம், பொது அறிவு நூல்கள் மற்றும் இதழ்களை வாங்கி அவர்கள் கல்வியை மெருகேற்ற உதவிடும் வகையில் மாதந்தோறும் ரூ. 1,000 வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading