டி20 மகளிர் உலக கோப்பை : பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!

மகளிர் டி20 உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது.

10வது மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மகளிர் டி20 உலகக்கோப்பையில் நேற்று நடைபெற்ற 6வது லீக் ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதியது.

பர்மிங்காமில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி பேட்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 170 ரன்கள் குவித்தது. இந்திய வீராங்கனைகளில் அதிகபட்சமாக ஸ்மிருதி மந்தனா 68 ரன்களையும், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 36 ரன்களையும், ரிச்சா கோஷ் 34 ரன்களையும் குவித்தனர். இறுதியில் இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் குவித்தது.

இதையடுத்து, 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. இறுதியில் பாகிஸ்தான் 17 ஓவரில் 106 ரன்களை மட்டும் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் பாகிஸ்தானை 64 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.