அமெரிக்காவின் மிசோரி மாநிலத்தின் பேட்ஸ் நகரில் உள்ள விமான நிலையத்திலிருந்து சிறிய ரக விமான நேற்று புறபட்டுள்ளது. இந்த விமானத்தில், 11 ஸ்கை டைவிங் வீரர்கள் மற்றும் விமானி என மொத்தம் 12 பேர் பயணித்திருந்தனர். இதனிடையே விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கட்டுப்பாட்டை இழந்து அப்பகுதியில் உள்ள சாலை ஒன்றின் அருகே தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் விமானம் முழுவதும் தீப்பற்றி எரிந்ததுடன், அதில் பயணித்த அனைவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப் படையினர் மற்றும் அவசர சேவை பிரிவினர் விரைந்து சென்று உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு விசாரணைகளுக்காக அனுப்பி வைத்துள்ளனர். விமான விபத்துக்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், அமெரிக்க விமானப் போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட பாதுகாப்பு அமைப்புகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.




