267-வது பிறந்த நாள் : தீரன் சின்னமலையின் சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மரியாதை

தாய் நாட்டின் விடுதலைக்காக தன் வாழ்வையே அர்ப்பணித்து, அந்நியப் படைகளுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த மாவீரர் தீரன்சின்னமலையின் 267-வது பிறந்தநாளில் அவரின் வீரத்தையும், தியாகத்தையும் போற்றி வணங்குவதாக எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். நம் நாட்டின்…

தாய் நாட்டின் விடுதலைக்காக தன் வாழ்வையே அர்ப்பணித்து, அந்நியப் படைகளுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த மாவீரர் தீரன்சின்னமலையின் 267-வது பிறந்தநாளில் அவரின் வீரத்தையும், தியாகத்தையும் போற்றி வணங்குவதாக எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

நம் நாட்டின் சுத்தந்திரத்திற்காக போராடியவர்களில் மிக முக்கியமாணவர் தீரன் சின்னமலை. ஈரோடு மாவட்டத்தில் உள்ள காங்கேயம் அருகே மேலப்பாளையம் என்ற சிற்றூரில் பிறந்த தீரன் சின்னமலையின் இயற்பெயர் தீர்த்தகிரி. தனது இளம் வயதிலேயே வாள் பயிற்சி, வில் பயிற்சி, சிலம்பாட்டம், மல்யுத்தம் என அனைத்து விதமான அடிமுறைகளையும் கற்று தேர்ந்த வீரர் தான் தீரன் சின்னமலை. ஆங்கிலேயர்களிடமிருந்து, தன் தாய் நிலத்தின் உரிமைகளைக் காத்திட, மைசூர் மன்னன் திப்பு சுல்தானுடன் தன்னை இணைத்துக் கொண்டு, ஆங்கிலேயருக்கு எதிராக திப்பு சுல்தானோடு சேர்ந்து பல கட்ட போராட்டங்ள் நிகழ்த்தி வெற்றி கண்டவர்.

இப்படிப்பட்ட ஒரு ஆகச்சிறந்த சுதந்திரப் போராட்ட வீரரான தீரன் சின்னமலையின் 267-வது பிறந்த நாள் தமிழ்நாடு முழுவதும் ஏப்ரல் 17-ஆம் தேதியான இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை கிண்டி திரு.வி.க தொழிற்பேட்டை வளாகத்தில் தமிழக அரசு சார்பில் நிறுவப்பட்டுள்ள அவரது சிலை மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. அதிமுக பொதுச்செயலாளரும், தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, தீரன் சின்னமலை உருவச் சிலைக்கு மாலை அணிவித்தும், சிலைக்கு கீழே மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்திற்கு மலர் தூவியும்  மரியாதை செலுத்தினார்.

இதனை தொடர்ந்து, அதிமுக கழக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், கழக துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், செங்கோட்டையன், நத்தம் விசுவநாதன், டி.ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி, செல்லூர் ராஜு, முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதையை செலுத்தினர். இவர்களை தொடர்ந்து அதிமுக கழக தலைமை நிலையச் செயலாளர்கள், கழக நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர்.

இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஆங்கிலேயரின் அடக்குமுறைக்கு துளியும் அச்சமின்றி எதிர்த்து சண்டையிட்டு, வெற்றிகள் பல கண்டு, தாய் நாட்டின் விடுதலைக்காக தன் வாழ்வையே அர்ப்பணித்து, அந்நியப் படைகளுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த மாவீரர் தீரன்சின்னமலையின் பிறந்தநாளில் அவரின் வீரத்தையும், தியாகத்தையும் போற்றி வணங்குவதாக தெரிவித்துள்ளார்.

https://twitter.com/EPSTamilNadu/status/1647827589820735490?s=20

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.