வெளிநாட்டு பயணங்களுக்கு கூடுதல் வரி, அல்லது கூடுதல் கட்டணம் விதிப்பதற்கான ஒரு திட்டத்தை அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியானது. இதனை பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டமாக மறுத்து உள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியதாவது,
மக்களின் வெளிநாட்டு பயணங்களுக்கு வரி விதிக்க போவதாக வெளியான தகவல் முற்றிலும் பொய்யானது. இதில் துளியளவும் உண்மையில்லை. வெளிநாட்டுப் பயணத்தின் மீது அத்தகைய கட்டுப்பாடுகளை விதிப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. எங்கள் மக்களுக்கு வணிகம் செய்வதை எளிதாக்குதல் மற்றும் வாழ்வதை எளிதாக்குதல் ஆகியவற்றை மேம்படுத்துவதில் நாங்கள் உறுதியுடன் உள்ளோம்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







