ஐபிஎல் போட்டியின் இடையே வாக்குவாதம் : சூர்யகுமார் யாதவ் , நிதிஷ் ராணாவிற்கு அபராதம்

போட்டியின் இடையே வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் கொல்கத்தா அணியின் கேப்டன் நிதிஷ் ராணா ஆகியோருக்கு ஐபிஎல் நிர்வாக அபராதம் விதித்துள்ளது. ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் மும்பை…

போட்டியின் இடையே வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் கொல்கத்தா அணியின் கேப்டன் நிதிஷ் ராணா ஆகியோருக்கு ஐபிஎல் நிர்வாக அபராதம் விதித்துள்ளது.

ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் உடல்நலக்குறைவு காரணமாக மும்பை கேப்டன் ரோகித் சர்மா விளையாடவில்லை. அவருக்கு பதிலாக  சூர்யகுமார் யாதவ் அணியை வழிநடத்தினார்.

இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.  அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய  வெங்கடேஷ் அய்யர் 51 பந்தில் 104 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.  கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் குவித்தது.

186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்கியது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இஷன் கிஷானும், இம்பேக்ட் பிளேயராக ரோகித் சர்மாவும் களம் இறங்கினர். மும்பை இந்தியன்ஸ் அணி அதிரடியாக விளையாடியதால் 17.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்கள் எடுத்து தனது 2வது வெற்றியை பதிவு செய்தது.

இந்த போட்டியின்போது கொல்கத்தா அணியின் கேப்டன் நிதிஷ் ராணா மற்றும் மும்பை இந்தியன் அணியின் பந்து வீச்சாளர் ஹிரித்திக் சோகீன் இடையே மோதல் ஏற்பட்டது. இருவரும் போட்டியின் விதிமுறைகளை மீறி மைதானத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் ஐபிஎல் விளையாட்டு விதிமுறைகளின் படி கொல்கத்தா அணியின் கேப்டன் நிதிஷ் ராணாவிற்கு போட்டியின் தொகையிலிருந்து 25 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பந்து வீச்சாளர் ஹிரித்திக் சோகீனும் வாக்குவாதத்தில்  ஈடுபட்டதால் மும்பை அணிக்கு இது முதல் விதி மீறல் என்ற அடிப்படையில் அணியின் கேப்டனான சூர்ய குமார் யாதவிற்கு 12 லட்சம் அபாரதம் விதிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.