ரூ.5 நோட்டு, ரூ.10 நாணயங்களை வாங்க மறுக்கும் வணிகர்கள் – பொதுமக்கள் அவதி!

திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஐந்து ரூபாய் நோட்டுகளையும், பத்து ரூபாய் காயின்களையும் வணிகர்கள் மற்றும் பேருந்து நடத்துநர்கள் வாங்க மறுப்பதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம், கொல்லுமாங்குடி, பேரளம்…

திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஐந்து ரூபாய் நோட்டுகளையும், பத்து ரூபாய் காயின்களையும் வணிகர்கள் மற்றும் பேருந்து நடத்துநர்கள் வாங்க மறுப்பதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம், கொல்லுமாங்குடி, பேரளம் உள்ளிட்ட பல்வேறு
பகுதிகளில் ஐந்து ரூபாய் நோட்டுகளும் பத்து ரூபாய் காயின்களும் செல்லாது
என வணிகர்கள் பேருந்து ஓட்டுநர்கள் கூறுகின்றனர். மேலும், வணிகர்களிடம் இருந்து
மக்களும் அதை திரும்ப வாங்க மறுக்கின்றனர்.  இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.

அதிலும் குறிப்பாக, திருவாரூர் மாவட்டத்தில் இருந்து மயிலாடுதுறை வழித்தடத்தில் மயிலாடுதுறை நோக்கி செல்லக்கூடிய பல பேருந்துகளில் நடத்துனர்கள் ஐந்து ரூபாய் நோட்டுகள் மற்றும் பத்து ரூபாய் காயின்களை வாங்க மறுப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். அது போலவே பல இடங்களில் ஐந்து ரூபாய் நோட்டுகளையும் பத்து ரூபாய் காயின்களையும் கொடுத்தால் செல்லாது என கூறி வாங்க மறுப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

—-ம. ஶ்ரீ மரகதம்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.