தமிழக அமைச்சரவையில் யார் யாருக்கு என்ன துறை ஒதுக்கீடு?

தவெக அரசின் அமைச்சரவை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது

தமிழ்நாட்டின் முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் கடந்த 10ம் தேதி பதவியேற்றார். அன்றைய தினமே 9 தவெக எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர்களாக பதவியேற்றனர். ஆனால் அமைச்சர்கள் யாருக்கும் இலாகாக்கள் ஒதுக்கப்படாததால் அரசு துறைகளின் முக்கியமான கோப்புகள் கையெழுத்திடப்படாமல் இருந்தது.
இந்த நிலையில் தவெக அரசின் அமைச்சரவை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி,

முதலமைச்சர் ஜோசப் விஜய் – பொது நிர்வாகம், காவல்துறை, உள்துறை, மகளிர் நலன், சிறப்பு திட்ட செயலாக்கத்துறை, நகராட்சி நிர்வாகம்.

என். ஆனந்த் – ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை ஒதுக்கீடு

ஆதவ் அர்ஜூனா – பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை ஒதுக்கீடு

அருண்ராஜ் – மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை

செங்கோட்டையன் – நிதித்துறை

வெங்கடரமணன் – உணவுத்துறை அமைச்சராக நியமனம்

நிர்மல்குமார் – மின்சாரம் மற்றும் சட்டத்துறை நியமனம்

ராஜ்மோகன் – பள்ளிக்கல்வி மற்றும் தமிழக வளர்ச்சித்துறை

டி.கே.பிரபு – கனிமவளங்கள் மற்றும் சுரங்கங்கள் துறை

கீர்த்தனா – தொழில்துறை ஆகியவற்றை கவனிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.