தமிழ்நாட்டில் புதிதாக 1,669 பேருக்கு கொரோனா தொற்று

தமிழ்நாட்டில் புதிதாக 1,669 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முழுவ தும் ஒரே நாளில், ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 282 பேருக்கு கொரோனா…

தமிழ்நாட்டில் புதிதாக 1,669 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முழுவ தும் ஒரே நாளில், ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 282 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற் கொள்ளப்பட்டது. இதில் 1,669 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

கொரோனாவால் இதுவரை 26 லட்சத்து 42 ஆயிரத்து 030 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொற்றில் இருந்து ஒரே நாளில் ஆயிரத்து 565 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 25
லட்சத்து 89 ஆயிரத்து 899 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். அதே நேரத்தில்,
பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர்களில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை
உயிரிழந்தோர் எண்ணிக்கை 35 ஆயிரத்து 288 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் புதிதாக 196 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொற்றுக்கு சிகிச்சை
பெற்று வந்தவர்களில் 158 பேர், கடந்த 24 மணி நேரத்தில் மருத்துவமனையில் இருந்து
டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கோவையில் 205 பேருக்கு தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. செங்கல்பட்டில் 115 பேருக்கும் ஈரோட்டில் 132 பேருக்கும் தஞ்சாவூரில் 110 பேருக்கும் புதிதாகத் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.