தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

2026 சட்டமன்ற தேர்தலின் போது காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்த செல்வப்பெருந்தகை தன்னை மாநில தலைவர் பொறுப்பில் இருந்து விடுவிக்குமாறு கட்சி தலைமையிடம் கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது. இதனிடையே சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு மாநில தலைவர் பொறுப்பில் இருந்து விலகப் போவதாக செல்வப்பெருந்தகை அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் பொறுப்பில் இருந்து செல்வப்பெருந்தகை விடுவிக்கப்பட்டுள்ளார். மேலும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் விருதுநகர் எம்.பியுமான மாணிக்கம் தாகூரை மாநில தலைவராக நியமித்து கங்கிரஸ் கட்சியின் அகில இந்தியத் தலைமை அறிவித்துள்ளது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மாணிக்கம் தாகூரின் 31 ஆண்டுகால அரசியல் பயணம்:

1994 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி உறுப்பினர்

1995 மாணவர் காங்கிரசின் மாவட்ட பொதுச் செயலாளர்

1996 தமிழ்நாடு மாணவர் காங்கிரஸின் தேசிய பொதுச் செயலாளர்

1997 தேசிய மாணவர் காங்கிரஸின் தேசிய பொதுச் செயலாளர்

1998 மாணவர் காங்கிரசின் அகில இந்திய தலைவர்

2002 – 2005 இந்திய இளைஞர் காங்கிரஸின் தேசிய பொதுச் செயலாளர்

2006 காங்கிரஸ் மத்திய தேர்தல் ஆணையத் தலைவர்

2008 இந்திய இளைஞர் காங்கிரஸ் தேர்தல் ஆணையர்

2008 விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் (முதல் முறை)

2014 மக்களவைத் தேர்தல் காங்கிரஸ் தேர்வு குழு உறுப்பினர்
( மேற்குவங்கம் பீகார் மற்றும் அசாம்)

2017 – 2020 அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் மற்றும் கர்நாடக மாநில பொறுப்பாளர்

2019 விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் (இரண்டாம் முறை) மற்றும் காங்கிரஸ் மக்களவை கொறடா

2020 – 2023 தெலுங்கானா மாநில பொறுப்பாளர்

2024 விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் (மூன்றாம் முறை), ஆந்திர பிரதேசம் மற்றும் அந்தமான் நிக்கோபார் காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர்

2026 – தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் தலைவர்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.