முக்கியச் செய்திகள் இந்தியா

மோசமான சாலைகளால் திருமணம் ஆகலை: முதலமைச்சருக்கு ஆசிரியை கடிதம்

மோசமான சாலைகளால் தங்கள் கிராமத்தில் பலருக்குத் திருமணம் நடக்கவில்லை என்று ஆசிரியை ஒருவர், முதலமைச்சருக்கு எழுதிய கடிதம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கர்நாடக மாநிலம் தாவன்கரே (Davangere) மாவட்டத்தில் இருக்கிறது ஹெச்.ராம்புரா கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த ஆசிரியை, 26 வயது பிந்து. இவர் முதலமைச்சர் பசவராஜ் பொம்மைக்கு எழுதியுள்ள கடிதம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அந்தக் கடிதத்தில் அவர், எங்கள் பகுதியில் சாலைகள் மோசமாக இருக்கின்றன. அது இன் னும் பின் தங்கிய நிலையில்தான் இருக்கிறது. எங்கள் ஊரில் பலருக்குத் திருமணமாகவில் லை. அதற்கு மோசமான சாலைகள்தான் காரணம். இந்த ஊரில் திருமணம் செய்தால் குழந்தைகள் வெளியூர் சென்று கல்வி பயில சரியான சாலைகள் இல்லை என்று வெளியூர்க் காரர்கள் நினைக்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து இந்த கோரிக்கையின் மீது நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள் ளார். ‘நாங்கள் இந்த சாலையை மேம்படுத்த, ஏற்கனவே 1-2 லட்சம் ரூபாய் செலவு செய்துள் ளோம். ஆனால் அது போதுமானதாக இல்லை. எங்களுக்கு ரூ.50 லட்சத்தில் இருந்து ஒரு கோடி ரூபாய் தேவை. இதற்காக அரசிடம் கோரிக்கை வைத்திருக்கிறோம் என்கிறார் அந்தப் பகுதியின் பஞ்சாயத்து மேம்பாட்டு அதிகாரி.

Advertisement:
SHARE

Related posts

ஷங்கர் வேற லெவல் இயக்குநர்.. புகழும் பாலிவுட் நடிகை

Saravana Kumar

போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்த முதல்வர்!

Niruban Chakkaaravarthi

எச்சரித்த நரசிம்மராவ்; சாதித்த மன்மோகன் சிங்

Ezhilarasan