கார்த்தி, அதிதி ஷங்கர் நடிக்கும் ’விருமன்’ படத்தின் ஷூட்டிங் தேனி அருகே தொடங்க
இருக்கிறது.
மணிரத்னம் இயக்கும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்து முடித்துள்ள கார்த்தி, அடுத்து, ’விருமன்’ படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது.
கார்த்தி நடித்த ’கொம்பன்’ படத்தை இயக்கிய முத்தையா இந்தப் படத்தை இயக்குகிறார். இதில் இயக்குநர் ஷங்கர் மகள் அதிதி கதாநாயகியாக அறிமுகமாகிறார். படத்தில் பிரகாஷ் ராஜ், சூரி, ஆர்.கே.சுரேஷ் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டரில் நடிக்கின்றனர். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
மதுரை பின்னணியில் உருவாகும் இந்தப் படத்தின் கதை, குடும்ப உறவுகளை மையப் படுத்தி உருவாகி இருக்கிறது. இதில் தேன்மொழி என்ற கேரக்டரில் அதிதி ஷங்கர் நடிக் கிறார். இந்தப் படத்தின் முதல் ஷெட்யூல் தேனியில் விரைவில் தொடங்க இருப்பதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.








