எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தலத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “தமிழ்த்திரையுலகின் முன்னணி இயக்குநராக திகழ்ந்த பாக்யராஜ் சார் மறைவுற்ற செய்தியறிந்து வருந்தினேன்.
வள்ளுவர் கோட்டம் அருகேயுள்ள பாக்கியராஜ் சாரின் இல்லம் சென்று அவரது திருவுடலுக்கு மாலை வைத்து மரியாதைச் செலுத்தினோம். திரைக்கதை மன்னன் என்று போற்றப்பட்டவர். எழுத்தாளர் – பத்திரிகையாளர் – நடிகர் – தயாரிப்பாளர் – பாடலாசிரியர் – இசை அமைப்பாளர் என பன்முகத்திறமையோடு தனி முத்திரைப் பதித்தவர்.
அண்மையில் மறைந்த பாரதிராஜா சாரின் பட்டறையில் இருந்து வந்த அவர், தனது எழுத்தாற்றல் மூலம், குடும்ப உணர்வுகள் சார்ந்த கதைகளை நகைச்சுவையாகவும் – ஜனரஞ்சகமாகவும் காட்சிப்படுத்தினார். எண்ணற்ற அடுத்தத் தலைமுறை படைப்பாளிகளை உருவாக்கிய பெருமையும் பாக்யராஜ் சாரை சேரும்.
திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்ததற்காக அவருக்கு சமீபத்தில் எடுக்கப்பட்ட விழாவில் பங்கேற்று, கழகத்தலைவர் மு.க.ஸ்டாலின் பாக்யராஜ் சாரின் பெருமைகளைப் பேசினார்கள். பாக்யராஜ் சாரை இழந்து வாடும் அவரது துணைவியார் பூர்ணிமா பாக்யராஜ், சகோதரர் சாந்தனு, சகோதரி சரண்யா உள்ளிட்ட அவரது குடும்பத்தாருக்கும், அவருடைய ரசிகர்கள், நண்பர்கள், நலம்விரும்பிகள் அனைவருக்கும் என்னுடைய ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்த்திரையுலகம் உள்ளவரை பாக்யராஜ் சாரின் புகழ் நிலைத்திருக்கும்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




