அமோனியா வாயு கசிவு – உயிரிழப்பு எண்ணிக்கை 16 ஆக உயர்வு!

பெரியபாளையம் அருகே அமோனியா வாயு கசிந்து ஏற்பட்ட விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்ததால் உயிரிழப்பு எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த கண்ணிகைப்பேர் கிராமத்தில் இயங்கி வந்த தனியார் கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் எதிர்பாரா விதமாக அமோனியா நச்சு வாயு கசிந்து விபத்து ஏற்பட்டது. இதில், பணி​யில் இருந்த தொழிலா​ளர்​கள் 83 பேர் மயக்​கம் அடைந்​தனர். பலருக்கு கண் எரிச்​சல், மூச்​சுத் திணறல் பாதிப்​பு​கள் ஏற்​பட்​டது.

பாதிக்​கப்​பட்​ட​வர்​கள் உடனடி​யாக மீட்​கப்​பட்​டு, மஞ்​சங்​காரணை வேல்ஸ் மருத்​து​வக்​கல்​லூரி மருத்​து​வ​மனை, சிறுணி​யம் வெங்​கடேஸ்​வரா மருத்​து​வ​மனை, சென்னை ஸ்டான்லி அரசு மருத்​து​வக்​கல்​லூரி மருத்​து​வ​மனை மற்​றும் ராஜீவ்​காந்தி அரசு பொது மருத்​து​வ​மனை​களுக்கு அனுப்பி வைக்​கப்​பட்​டனர்.

இந்த விபத்தில் ஏற்கனவே 15 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள இறால் பதப்படுத்தும் ஆலையில் அமோனியா வாயு கசிந்து ஏற்பட்ட விபத்தில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் ஒருவர் மேலும் உயிரிழந்துள்ளார். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை தற்போது 16 ஆக உயர்ந்துள்ளது. சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒடிசா மாநிலத்தைச் சார்ந்த கபிதா ஜுங்கா(18) பெண் தொழிலாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.