வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு  பூ பல்லக்கில் காமாட்சியம்மன் வீதி உலா: நூற்றுக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி காமாட்சியம்மன் கோயில் வசந்த பெருவிழாவில் பூ பல்லக்கில் அம்மன்  வீதி உலா நடைபெற்றது. பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வீதி உலா வந்த அம்மனை நூற்றுக்கணக்கான பக்தர்கர்கள் வழிபட்டனர். மன்னார்குடி…

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி காமாட்சியம்மன் கோயில் வசந்த பெருவிழாவில் பூ பல்லக்கில் அம்மன்  வீதி உலா நடைபெற்றது. பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வீதி உலா வந்த அம்மனை நூற்றுக்கணக்கான பக்தர்கர்கள் வழிபட்டனர்.

மன்னார்குடி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள 200 ஆண்டுகள் பழமையான அன்னை காமாட்சியம்மன் ஆலய சித்திரை மாத வசந்த பெருவிழா ஏப்ரல் 18 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. பூச்சொரிதல், பால்குட திருவிழாக்கள் நடைபெற்ற நிலையில் முக்கிய விழாவான பூ பல்லக்கு வீதி உலா மே 5ம் தேதி இரவு நடைபெற்றது. பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் அன்னை காமாட்சி எழுந்தருளினார். பின்னர் கள்ளுடையான்,காத்தவராயன், உள்ளிட்ட பரிவார தெய்வகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

காமாட்சி அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டடு வீதி உலா தொடங்கியது. அதிர்வேட்டுக்கள் முழங்க மேல தாளத்துடன் நடைபெற்ற வீதி உளாவில் பக்தர்கள் அம்மனை வழிபட்டனர். இரவு முழுவதும் மன்னார்குடியின் பல்வேறு வீதிகள் வழியாக சென்று அதிகாலையில் பூ பல்லக்கு கோயிலை வந்தடைந்தது. பெண்கள் இளைஞர்கள் என நூற்றுக்கணக்கானோர் சித்திரை வசந்த பெருவிழாவில் கலந்து கொண்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.