நாகை சூடாமணி விகாரத்தில் தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு!

நாகையில் சூடாமணி விகாரம் அமைந்துள்ள பகுதியில் இந்திய தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். சோழர்கள் காலத்தில் மிகப்பெரிய துறைமுக நகரமாக விளங்கி, சூடாமணி விகாரம் கட்டப்பட்டு புத்தமதத்தின் தலைமை பீடமாக நாகப்பட்டினம் மாவட்டம்…

நாகையில் சூடாமணி விகாரம் அமைந்துள்ள பகுதியில் இந்திய தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

சோழர்கள் காலத்தில் மிகப்பெரிய துறைமுக நகரமாக விளங்கி, சூடாமணி விகாரம் கட்டப்பட்டு புத்தமதத்தின் தலைமை பீடமாக நாகப்பட்டினம் மாவட்டம் இருந்ததாக வரலாற்றுச் சுவடுகள் கூறுகின்றன. இதற்கிடையே நாகை நகரத்தின் தற்போது அமைந்துள்ள பழைய நீதிமன்ற வளாகத்தில் சூடாமணி விகாரம் இருந்ததாகவும், வளாகத்தை ஆய்வு மேற்கொண்டு நாகை மண்ணில் பண்பாட்டு அடையாளத்தை மீட்டெடுக்க வேண்டு்ம் என வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் நாகை சட்டமன்றத் உறுப்பினர் ஷாநவாஸ் ஆகியோர் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர்.

இதன் தொடர்ச்சியாக இந்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் நாகை மாவட்டத்தை ஆய்வு செய்தனர். சூடாமணி விகாரம் இருந்தாக கூறப்பட்டும் நீதிமன்ற வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

இதை தொடர்ந்து தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் பேசுகையில் நமது நாகரிகத்தை நாம் பாதுகாக்க வேண்டும் என்றும், வரலாற்று சின்னங்களை பேணி காக்க வேண்டும் என தெரிவித்தார். இதை தொடர்ந்து ஏற்கனவே நாகை மாவட்டத்தில் அகழ்வாய்வில் மீட்கப்பட்ட புத்த சிலைகளை கொண்டு நாகை மாவட்டத்தில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என கூறினார். இதற்கிடையே வருகை தந்துள்ள தொல்லியல் துறை குழுவினர் மூன்று நாட்கள் நாகை மாவட்டத்தில் ஆய்வு செய்ய உள்ளாதாக அவர் தெரிவித்தார்.

—கோ. சிவசங்கரன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.