நரிக்குடி அருகே அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியர்கள் யாரும் இல்லாததால் மாணவர்களே வகுப்பெடுக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே பூம்பிடாகை கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் முப்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் தலைமையாசிரியர் உள்பட இரு ஆசிரியர்கள் பணியாற்றி வந்த நிலையில் கடந்த ஆண்டு தலைமையாசிரியர் உயிரிழந்துவிட்டார் எனவும் மற்றொரு ஆசிரியர் கடந்த ஓராண்டாகப் பள்ளிக்கு வருவதில்லை எனவும் கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து கொரோனா ஊரடங்கிற்க்குப் பிறகு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்ட பிறகும் ஆசிரியர்கள் யாரும் வராததால் ஐந்தாம் வகுப்பு மாணவர்களே மற்ற மாணவர்களுக்கு வகுப்பெடுத்து வருகின்றனர். அதனால் பூம்பிடாகை அரசு தொடக்கப்பள்ளிக்கு உடனடியாக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் எனப் பொதுமக்களும் பள்ளி மாணவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.








