மியான்மரில் மண் சரிந்து விபத்து: 70 தொழிலாளர்கள் மாயம்

மியான்மரில் மாணிக்கக்கல் சுரங்கத்தில் மண் சரிந்து விழுந்ததில் 70க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மாயமாகினர். மியான்மரில் உள்ள Kachin மாநிலத்தில் உள்ள Hpakant பகுதியில் புலம்பெயர் தொழிலாளர்களைக் கொண்டு சட்டவிரோதமாக, பச்சை மாணிக்கக்கல் சுரங்கம் செயல்பட்டு…

மியான்மரில் மாணிக்கக்கல் சுரங்கத்தில் மண் சரிந்து விழுந்ததில் 70க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மாயமாகினர்.

மியான்மரில் உள்ள Kachin மாநிலத்தில் உள்ள Hpakant பகுதியில் புலம்பெயர் தொழிலாளர்களைக் கொண்டு சட்டவிரோதமாக, பச்சை மாணிக்கக்கல் சுரங்கம் செயல்பட்டு வந்தது.

இந்த சுரங்கத்தில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில், இன்று சுரங்கத்தில் திடீர் மண் சரிவு ஏற்பட்டதில் 70க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப் படையினர் தொழிலாளர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மண் சரிவில் சிக்கிய தொழிலாளர்கள், சுரங்கத்திற்கு அருகே கழிவுகள் கலக்கும் ஏரியில் அடித்துச்செல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதே பகுதியில் கடந்த ஆண்டு ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி 160க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.