உணவகத்திற்கு உள்ளே புகுந்த பேருந்து

விருதுநகர் மாவட்டத்தில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து ஒன்று, சாலையோர உணவகத்திற்குள் புகுந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. விருதுநகர் மாவட்டம் சாத்தூரிலிருந்து சுமார் 30க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் பேருந்து ஒன்று மதுரை நோக்கி…

விருதுநகர் மாவட்டத்தில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து ஒன்று, சாலையோர உணவகத்திற்குள் புகுந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூரிலிருந்து சுமார் 30க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் பேருந்து ஒன்று மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது அருப்புக்கோட்டை அருகே, பாலவனத்தம் கிராமத்திற்குள் சென்று கொண்டிருந்தபோது திடீரென பேருந்தின் முன்பக்க டயர் வெடித்ததால், கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையோர உணவகத்திற்குள் புகுந்ததால் விபத்து ஏற்பட்டது.

பேருந்தில் பயணம் செய்த இருவர் இந்த விபத்தில் காயமடைந்தனர். மேலும் இந்த விபத்தில் உணவகம் முழுவதும் சேதமானது. தகவலறிந்து வந்த போலீசார் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் ஹோட்டலில் பயன்படுத்தப்பட்ட கேஸ் சிலிண்டர் பேருந்தின் அடியில் சிக்கி கேஸ் வெளியேறிக் கொண்டிருந்தது. இதனால் உடனடியாக அங்கு தீயணைப்பு துறையினர் வரவழைக்கப்பட்டு சிலிண்டர் அப்புறப்படுத்தப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.