பழனியில் மஞ்சள் பை குறித்த விழிப்புணர்வு பேரணி

திண்டுக்கல் மாவட்டம் பழனி ஆண்டவர் மகளிர் கலைக் கல்லுாரி சார்பில் பழனியில் மஞ்சள் பை குறித்த விழிப்புணர்வு பேரணி நடத்தினர். திண்டுக்கல் மாவட்டம் பழனி கோயிலுக்கு சொந்தமான அருள்மிகு பழனி ஆண்டவர் மகளிர் கலை…

திண்டுக்கல் மாவட்டம் பழனி ஆண்டவர் மகளிர் கலைக் கல்லுாரி சார்பில் பழனியில் மஞ்சள் பை குறித்த விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி கோயிலுக்கு சொந்தமான அருள்மிகு பழனி ஆண்டவர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி சார்பில் மஞ்சள்கை குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. கல்லுாரி தாளாளரும், பழனி முருகன் கோவில் இணை ஆணையருமான நடராஜன், பழனி டி எஸ்பி சிவசக்தி ஆகியோர் கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தனர்.

பழனி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கிய பேரணியில் கல்லுாரி மாணவிகள் 200க்கும் மேற்பட்டோர் சைகளில் மஞ்சள் பையை வைத்தபடி விழிப்புணர்வு கோஷங்களை எழும்பியபடி கலந்து கொண்டனர். பழனி நகரின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்று அடிவாரம் குடுமுழுக்கு நினைவரங்கத்தில் நிறை பெற்றது.

பின்னர் நடந்த நிகழ்ச்சியில் பிளாஸ்டிக் பயன்பாட்டில் ஏற்படும் தீமைகள் மற்றும் மஞ்சள் பை பயன்படுத்த வேண்டிய அவசித்தை குறித்து விளக்கும் வகையில் கரகாட்டம், ஒயிலாட்டம் மற்றும் மாணவிகளின் சிலம்பாட்டம், நாடகம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் கல்லுாரி முதல்வர் புவனேஸ்வரி, கோவில் துணை ஆணையர் பிரகாஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

—-அனகா காளமேகன்

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.