அதிபர் ஜோ பைடனுக்கு புற்றுநோய் சிகிச்சை இனி தேவைப்படாது – மருத்துவர்

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு ஏற்பட்டிருந்த தோல் புற்றுநோய் திசுக்கள் முற்றிலும் அகற்றப்பட்டதாக வெள்ளை மாளிகை மருத்துவர் தெரிவித்துள்ளார். ஜோ பைடனுக்கு கடந்த மாதம் புற்றுநோய்க்கான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்த சிகிச்சை மூலம் அவருக்கு…

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு ஏற்பட்டிருந்த தோல் புற்றுநோய் திசுக்கள் முற்றிலும் அகற்றப்பட்டதாக வெள்ளை மாளிகை மருத்துவர் தெரிவித்துள்ளார்.

ஜோ பைடனுக்கு கடந்த மாதம் புற்றுநோய்க்கான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்த சிகிச்சை மூலம் அவருக்கு புற்றுநோய் திசுக்களால் மார்பில் ஏற்பட்டிருந்த காயம் குணமடைந்துள்ளதாகவும், அவருக்கு இனி சிகிச்சை தேவைப்படாது என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அமெரிக்க வெள்ளை மாளிகை மருத்துவர் கெவின் ஓ கான்னர் கூறுகையில், ஜோ பைடனுக்கு தொடர் தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனால், அவருக்கு மார்பில் ஏற்பட்டிருந்த புண் போன்ற புற்றுநோய் திசுக்கள் முற்றிலும் அகற்றப்பட்டது. மார்பில் ஏற்பட்ட காயமும் முழுமையாக குணமடைந்துள்ளது.

இதையும் படிக்க : சா்வதேச விண்வெளி நிலையத்தைச் சென்றடைந்தனர் 4 விண்வெளி வீரா்கள்

ஆரம்பகட்ட புற்றுநோய் என்பதால் தொடர் சிகிச்சை மூலம் முற்றிலும் அகற்றப்பட்டுள்ளது. மேலும், அதிபருக்கு ஏற்பட்ட புற்றுநோய் பாதிப்பு பரவக் கூடியது இல்லை என்றும், அவர் ஆரோக்கியமாக இருப்பதாகவும், மேலும் புற்றுநோய் திசு மாதிரி பயாப்ஸிக்கு அனுப்பப்பட்டதாகவும்  தெரிவித்துள்ளார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.