சென்னை பெரம்பூர் நகைக் கடையில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை பெரம்பூரில் உள்ள ஜே.எல்.கோல்டு பேலஸ் நகைக் கடையில், பிப்.10ம் தேதி, 9 கிலோ தங்க நகைகள் மற்றும் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான வைர நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டன. கொள்ளையர்கள் கடையில் ஷட்டர் மற்றும் நகை பெட்டகத்தை வெல்டிங் மிஷின் மூலம் வெட்டி எடுத்து தங்கம் மற்றும் வைர நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். மேலும், சிசிடிவி கேமராவில் உள்ள ஹார்ட் டிஸ்கையும் எடுத்துச் சென்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனை தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் தொடர்பாக 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை தேடி ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கு தனிப்படைகள் சென்றன.
இதையும் படியுங்கள் : நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலி; பழங்குடி மாணவன் படிப்பு செலவை ஏற்ற பத்மநாபபுரம் சார் ஆட்சியர்!
இதையடுத்து, இரு ஆந்திர நபர்களை சென்னை அழைத்து வந்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பெரம்பூர் நகைக் கடையில் நடைபெற்ற கொள்ளைக்கும் அவர்களுக்கும் தொடர்பு இல்லை என தெரியவந்தது. இந்த வழக்கில் முன்னதாக 7 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், கொள்ளையர்கள் குறித்த எந்த தகவலும் கிடைக்காமல் போலீசார் திணறினர்.
இந்நிலையில் இன்று, கொள்ளை சம்பவம் தொடர்பாக திவாகரன், கஜேந்திரன் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பெங்களூர் மகாலட்சுமி லே அவுட் போலீசாரால் இவர்கள் கைது செய்யப்பட்டு, சென்னை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து கைதான இருவரிடமும் சென்னை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.