முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

குரூப் 4 தேர்வில் எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை- டிஎன்பிஎஸ்சி விளக்கம்

குரூப் 4 தேர்வில் எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் அரசில் உள்ள காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. அதன்படி 397 கிராம நிர்வாக அலுவலர், 2 ஆயிரத்து 792 இளநிலை உதவியாளர், 34 வரித்தண்டலர், 509 நில அளவையர், 74 வரைவாளர், ஆயிரத்து 901 தட்டச்சர், 784 சுருக்கெழுத்து தட்டச்சர் உள்பட குரூப்-4 பதவிகளில் வரும் 7 ஆயிரத்து 301 பணியிடங்களுக்கு கடந்த ஆண்டு (2022) ஜூலை மாதம் 22-ம் தேதி தேர்வு நடந்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த தேர்வை எழுத 22 லட்சத்து 2 ஆயிரத்து 942 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், தேர்வை 18 லட்சத்து 50 ஆயிரத்து 471 பேர் எழுதினார்கள். இந்த தேர்வுக்கான முடிவு நேற்று முன்தினம் வெளியானது. இந்த முடிவில் குளறுபடி இருப்பதாக தேர்வர்கள் தெரிவித்தனர்.

“Typing பிரிவில் ஒரு lower ஒரு higher வைத்து இருந்து அதிக மதிப்பெண் பெற்று இருந்தாலும், இரண்டுமே higher வைத்து குறைந்த மதிப்பெண்கள் பெற்றவர்களை விட தர வரிசையில் பின் தங்கி தான் இருப்பார். இது தான் typing rank preference” என அதிகாரிகள் விளக்கம் கொடுத்துள்ளனர்.

மேலும் குரூப் 4 மதிப்பெண் கணக்கீட்டு பணிகள் சாஃப்ட்வேர் மூலம் செய்யப்பட்டு, அதிகாரிகள் மூலமாக நேரடி சரிபார்ப்பும் செய்யப்பட்டுள்ளது. எந்தவிதமான தவறும் நடந்து விடக்கூடாது என்பதற்காக தான் அதிக காலம் எடுத்துக் கொண்டு சரியான முறையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த விவகாரத்தில் தவறு நடந்திருக்க வாய்ப்பே இல்லை.

இதில் ஏதேனும் குளறுபடிகளோ அல்லது தவறோ நடந்து இருப்பதாக தேர்வர்கள் கருதினால் உரிய ஆதாரங்களோடு grievance.tnpsc@tn.gov.in என்ற இமெயில் மூலமாக புகார் தெரிவிக்கலாம் எனவும் டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

உத்தரகாண்ட் முதலமைச்சராக புஷ்கர் சிங் தாமி இன்று பதவியேற்கிறார்

EZHILARASAN D

மாணவி பிரியாவின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் – தமிழக அரசு அறிவிப்பு

EZHILARASAN D

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாய் தயாளு அம்மாளை திடீரென சந்தித்த ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்

Dinesh A