புதிய நாடாளுமன்ற கட்டட திறப்புவிழா அன்று நடைபெற உள்ள மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் பேரணியை தடுக்கும் வகையில், டெல்லியின் எல்லைகளுக்கு சீல் வைக்க அம்மாநில போலீசார் முடிவு செய்துள்ளனர்.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்த நிலையில், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி முன்னணி மல்யுத்த வீராங்கனைகள் வினேஷ் போகத், சாக்ஷி மாலிக், சங்கீதா போகத் மற்றும் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா உள்ளிட்டோர் டெல்லி ஜந்தர்மந்தர் பகுதியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதன் ஒரு பகுதியாக வரும் மே 28-ம் தேதி புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவின் போது, நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக செல்ல மல்யுத்த வீராங்கனைகள் திட்டமிட்டுள்ளனர். மேலும், நாடாளுமன்றம் முன்பு வீராங்கனைகள் கூட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பாதுகாப்பு கருதி பேரணி மற்றும் கூட்டம் நடைபெறாமல் தடுக்க டெல்லியின் அனைத்து எல்லைகளையும் சீல் வைக்க உள்ளதாக அம்மாநில போலீசார் அறிவித்துள்ளனர்.