பட்டியலின பகுதியில் குடிநீரில் புழுக்கள் கலந்து வந்துள்ளது. இதுகுறித்து செய்தி வெளியிட்ட நியூஸ் 7 தமிழின் எதிரொலியால் சுத்தமான குடிநீர் விநியோகிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் புளியரை, தெற்கு மேடு பகுதியில் உள்ள 12 வது பகுதி
பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியாக உள்ளது. இப்பகுதியில் கடந்த வாரம்
ஊராட்சி மூலம் விநியோகப்பட்ட குடிநீர் புழுக்கள் மற்றும் பூச்சிகள் நிறைந்து
அசுத்தமாக காணப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையறியாமல், நீரை அருந்திய பலருக்கு வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக செய்தி வெளியிட்ட நியூஸ்7தமிழ் செய்தியின் எதிரொலியால் தற்போது சுத்தமான குடிநீர் வழங்கப்பட்டுள்ளது. மேலும் புழுக்கள் நிறைந்த அசுத்தமான குடிநீர் வழங்கியது தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருவதாகவும் புளியரை ஊராட்சி மன்ற தலைவர் அழகிய திருச்சிற்றம்பலம் நியூஸ்7 தமிழுக்கு தகவல்
தெரிவித்துள்ளார்.
பட்டியலின மக்கள் பகுதி என்பதால பாரபட்சம் காட்டப்படுவதாகவும் ஊராட்சி மன்ற தலைவர் யாரும் இது தொடர்பாக விரைந்து நடிவடிக்கை எடுக்கவில்லை என மக்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தொடர்ந்து சுகாதரமற்ற வகையில் குடிநீர் வழங்கப்பட்டால், தங்களுடைய வாக்காளர் அடையாள அட்டைகளை ஒப்படைத்து வரும் தேர்தல்களை புறக்கணிக்கப்போவதாக மக்கள் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.