உலக சுற்றுச்சூழல் தினம் – முதலமைச்சர் ஜோசப் விஜய் வாழ்த்து!

நமது சிறிய முயற்சிகளே நாளைய தலைமுறைக்கு பாதுகாப்பான, ஆரோக்கியமான மற்றும் பசுமையான உலகை உருவாக்கும் என்று முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5 ம் தேதி அன்று உலக சுற்றுச்சூழல் நாள் (World Environment Day) கொண்டாடப்படுகிறது. புவிக்கோளையும் இயற்கையையும் காப்பாற்றுவதற்கான உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஐக்கிய நாடுகள் சபை (UNEP) இத்தினத்தை உருவாக்கியது. இது சுற்றுச்சூழலை ஆதரிக்கும் ஐக்கிய நாடுகளின் முதன்மை விழிப்புணர்வு தினமாக விளங்குகிறது. இந்த நிலையில் இன்று சுற்று சூழல் தினத்தையொட்டி முதலமைச்சர் ஜோசப் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

“உலக சுற்றுச்சூழல் நாளை முன்னிட்டு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாம் இன்று எடுக்கும் முடிவுகள்தான் நம் நாளைய எதிர்காலத்தை நிர்ணயிக்கும் என்பதை இந்நாள் நமக்கு நினைவூட்டுகிறது.

இந்நாளில், மரக்கன்றுகளை நட்டு, நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி, நெகிழிப்பயன்பாட்டைக் குறைத்து, இயற்கை வளங்களையும் சுற்றுச்சூழலையும் பாதுகாத்திட உறுதியேற்போம். நமது சிறிய முயற்சிகளே நாளைய தலைமுறைக்கு பாதுகாப்பான, ஆரோக்கியமான மற்றும் பசுமையான உலகை உருவாக்கும்.

இயற்கையைக் காப்போம்;
நம் எதிர்காலத்தை வளமாக்குவோம்”! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.