தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற தவெக பல்வேறு கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ளது. முதமைச்சராக தவெக தலைவர் பொறுப்பேற்றுள்ளார். மேலும் 35 பேர் கொண்ட அமைச்சவரையும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் வரும் ஜூன் 18 ஆம் தேதி தமிழ் நாடு சட்டமன்றம் கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் நாள் கூட்டத்தில் ஆளுநர் ஆர்.வி. அர்லேக்கர் உரை நிகழ்த்துகிறார். அடுத்த இரண்டு நாட்களுக்கு ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெறும். இதில் ஆளும் மற்றும் எதிர்கட்சிகள் உறுப்பினர்கள் பங்கேற்று பேசுவர்.





