கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரம் அருகே கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் 30 அடி கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை, சுமார் 4 மணி நேர போராட்டத்திற்கு பின் குழித்துறை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே, அரமன்னம் பகுதியை சேர்ந்தவர் புஷ்பராஜ் இவரது மனைவி ஷிபா (37). இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில், இதனால் ஆத்திரம் அடைந்த ஷீபா வீட்டின் முன் உள்ள 30 அடி கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றார்,
உடனே அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன் முன் பொதுமக்களும் மீட்பு பணியில் இறங்கிய நிலையில், சுமார் நான்கு மணி நேர போராட்டத்திற்கு பின் குழித்துறை தீயணைப்பு துறை வீரர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து குலசேகரம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
—-ரூபி.காமராஜ்







