ஏனாம்பேட்டை சக்திகாளியம்மன் கோயிலில் திருநடன உற்சவ விழா!

திருவிடைமருதூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஏனாம்பேட்டை ஸ்ரீசக்திகாளியம்மன் கோயிலின் 91-ம் ஆண்டு திருநடன உற்சவ விழா கோலாகலமாக தொடங்கியது. தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஏனாம்பேட்டை ஸ்ரீ சக்திகாளியம்மன் கோயில் 91…

திருவிடைமருதூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஏனாம்பேட்டை ஸ்ரீசக்திகாளியம்மன் கோயிலின் 91-ம் ஆண்டு திருநடன உற்சவ விழா கோலாகலமாக தொடங்கியது.

தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஏனாம்பேட்டை ஸ்ரீ சக்திகாளியம்மன் கோயில் 91 ஆம் ஆண்டு திரு நடன உற்சவம் கடந்த 24ஆம் தேதி விசேஷ பூஜைகளுடன் தொடங்கிய நிலையில், தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான திரு நடன உற்சவம் கோயிலில் உள்ள மூலவ தெய்வங்களுக்கு சிறப்பு ஆராதனைகளுடன் சிவாச்சாரியார் பெருமக்களின் வேதமந்திரங்கள் முழங்கிட பூஜிக்கப்பட்ட புனித நீர் கொண்ட கலசங்கள் புறப்பட்டு சக்தி காளியம்மனுக்கு சிறப்பு பூஜைகளும்  சிரசை அணிந்து திருநடனம் ஆடும் பக்தர்களுக்கு காப்பு கட்டுதலும் நடந்தது.

பின்னா், மஞ்சள் புடவை அணிந்து கையில் சக்தி வேல் ஏந்தி கலியுகத்தை
காத்தருளும் சக்தி காளியம்மன் புறப்பாடு வின்னதிரும் வான வேடிக்கைகளுடன்,
20க்கும் மேற்பட்ட நாதஸ்வரம் மேள கலைஞர்கள் சிறப்பு இசை வாசித்திட ஸ்ரீ சக்தி
காளியம்மன் திருநடன உற்சவம் தொடங்கியது. தொடர்ந்து 5நாட்கள் திருவிடைமருதூரில் பெரும்பாலான பகுதிகளில் திருநடன உற்சவம் நடக்கிறது. இதில் பக்தர்கள் தஙகளது இல்லங்களில் அம்பாளை அழைத்து பூஜைகள் செய்து வழிபடுவது தனிச்சிறப்பு வாய்ந்ததாக போற்றப்படுகிறது.

—-ரூபி.காமராஜ்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.