புதுக்கோட்டையில் கனமழை – தண்ணீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதி!

புதுக்கோட்டையில் தொடர்ந்து இரண்டு மணி நேரம் பெய்த கனமழையால், மின்வாரிய அலுவலகம், உழவர் சந்தை மற்றும் பள்ளிக்கூடங்கள் ஆகியவற்றில் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் அவதி அடைந்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில்,…

புதுக்கோட்டையில் தொடர்ந்து இரண்டு மணி நேரம் பெய்த கனமழையால், மின்வாரிய அலுவலகம், உழவர் சந்தை மற்றும் பள்ளிக்கூடங்கள் ஆகியவற்றில் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் அவதி அடைந்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில், கடந்த கோடை கால வெயிலின் தாக்கம் மிகவும் அதிகரித்து வந்தது. இன்று காலை திடீரென 7 மணி முதல் கனமழை பெய்தது. இதனால் மழை நீர் நீர்நிலைகளுக்கு செல்லும் வடிகால்கள் ஆக்கிரமிப்பு காரணமாக அலுவலகங்கள், பள்ளிக்கூடங்கள், சந்தைகள் என பல பகுதிகளில் மழைநீருடன் சேர்ந்து சாக்கடை நீரும் சென்றதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.

மின்வாரிய அலுவலகத்தில் மழைநீர் தேங்கியிருப்பதால் மிண்கட்டணம் செலுத்த வருவோர் அவதிப்பட்டு தட்டு தடுமாறி வந்து மின் கட்டணம் செலுத்தினர். இதே போல் உழவர் சந்தையிலும் தேங்கியுள்ளதால் காய்கறிகள் தண்ணீரில் மிதக்கும் சூழ்நிலை வந்துள்ளது. மேலும் சந்தைபேட்டை பள்ளி வளாகத்திலும் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் அவதி அடைந்துள்ளனர்.

—–அனகா காளமேகன்

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.