12-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாயில் நடைபெற்றது. இதில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகல் மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதை தொடர்ந்து பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 347 ரன்கள் குவித்தது. பாகிஸ்தான் அணியில் அதிரடியாக விளையாடிய தொடக்க வீரர் சமீர் மின்ஹாஸ் 113 பந்துகளில் 172 ரன்கள் விளாசினார்.
தொடர்ந்து 348 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி தொடக்கம் முதலே தடுமாறியது. 26.2 ஓவர்களில் 156 ரன்களுக்கு அனைத்து விக்கெடுகளையும் இழந்த இந்திய அணி தோல்வி அடைந்தது.
இந்திய அணியில் அதிகபட்சமாக தீபேஷ் தேவேந்திரன் 36 ரன்களும், வைபவ் சூர்யவன்ஷி 26 ரன்களும் எடுத்தனர். பாகிஸ்தான் தரப்பில் அலி ராஸா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதன் மூலம் பாகிஸ்தான் அணி இந்தியாவை 191 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.







