முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

தொடங்கியது புதுச்சேரி சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டம்: திமுக-காங்கிரஸ் வெளி நடப்பு

புதுச்சேரி சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டம் இன்று தொடங்கியது. கூட்டத்தில் தனி மாநில அந்தஸ்து, மின்துறை தனியார் மயம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து கண்டன குரல் எழுப்பி திமுக-காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளி நடப்பு செய்தனர் .

புதுச்சேரி சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு ஆகஸ்டு 22-ந் தேதி பட்ஜெட் தாக்கல்
செய்யப்பட்டது. சட்டப்பேரவையை 6 மாதத்திற்கு ஒருமுறை கூட்ட வேண்டும் என்பது விதி. இதன்படி 6 மாத காலம் முடிவடைய உள்ளதால், புதுச்சேரி சட்டப்பேரவை இன்று காலை 9.30 மணிக்கு கூடியது. சபாநாயகர் செல்வம் திருக்குறள் வாசித்து சபை நிகழ்வுகளை தொடங்கி வைத்தார் .இந்த நிகழ்வில் முதலாவதாக மறைந்த ராணி எலிசபெத்துக்கு பேரவையில் இரங்கல் தெரிவித்து சட்டமன்ற உறுப்பினர்கள் 2 நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

குளிர்கால கூட்டம் என தெரிவிக்கப்பட்டிருந்தாலும், சபை இன்று ஒரு நாள் மட்டுமே நடைபெறும் என்பதால் தனி மாநில அந்தஸ்து, மின்துறை தனியார் மயம், அரசு பள்ளி மாணவர்களுக்கு இதுவரை சீருடை வழங்காதது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை பேரவையில் எழுப்ப திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் ஏற்கனவே திட்டமிட்திருந்தனர்.

மத்திய அரசு புதுச்சேரிக்கு 2023-24ம் நிதி ஆண்டுக்கு ரூ.3 ஆயிரத்து 124 கோடியை மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கியுள்ளது. கடந்த 12 ஆண்டாக புதுச்சேரியில் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படாத நிலையில், இந்த ஆண்டு மார்ச் மாதம் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதற்காக மாநில திட்டக்குழுவை கூட்டி துறைவாரியாக ஒதுக்கப்பட வேண்டிய நிதி விபரங்களை பெற்று ரூ.11 ஆயிரத்து 600 கோடிக்கு வரைவு பட்ஜெட்டை மத்திய அரசு ஒப்புதலுக்காக அனுப்பி உள்ளது. இதற்கு மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன் மார்ச் மாதம் மீண்டும் சட்டப்பேரவை கூட்டப்பட்டு முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

இந்த நிலையில் தனிமாநில அந்தஸ்து விவகாரத்தில் முதலமைச்சர் ரங்கசாமி உறுதியாக இருப்பதாக கூறினாலும், கூட்டணி கட்சியான பாஜக இதுவரை எந்தவிதமான முடிவையும் அறிவிக்கவில்லை. ஆகவே இந்த விவகாரத்தில் ஆட்சியில் உள்ள இரு கட்சிகளின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டுமென திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் பேரவை ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே மாநில அந்தஸ்து விவாகரத்தில் அரசின் நிலைப்பாடு என்ன என்பதை பேரவையில் தெரிவிக்க வேண்டும் என எதிர்கட்சி தலைவர் சிவா முதலில் குரல் எழுப்பினார்.

இதனையடுத்து மாநில அந்தஸ்து விவகாரம் குறித்து பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும், நியாயவிலைக் கடைகள் மூடப்பட்டிருப்பது, மின்துறை தனியார் மயம், காரைக்கால் துறைமுகத்தை முற்றிலும் தனியாருக்கு விற்பது, அரசு சார்பு நிறுவனங்கள் மூடப்படுவது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக கண்டன முழக்கங்களை எழுப்பி பேரவையில் இருந்து எதிர்கட்சித் தலைவர் சிவா தலைமையில் திமுக மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் வெளி நடப்பு செய்தனர்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தோனியை தாக்குப்பிடிப்பாரா கோலி?

G SaravanaKumar

டாஸ்மாக்போல வனத்துறை மீது எப்போது அக்கறை காட்டுவீர்கள்?- உயர்நீதிமன்றம் கேள்வி!

Web Editor

அறக்கட்டளை பணமோசடி விவகாரம்; சினேகன், ஜெயலட்சுமி மீது வழக்குப்பதிவு

EZHILARASAN D