‘ஒரு பெரிய இயக்கத்தை சிதறடித்து கொண்டிருக்கிறோம் என்று அவர்கள் சிந்திக்க வேண்டும்’ – செங்கோட்டையன் பேட்டி

தேர்தல் ஆணையத்தின் முடிவு எதுவாக இருந்தாலும் வெற்றி என்ற இலக்கை நோக்கி பயணிக்கிறோம்  என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நியூஸ் 7 தமிழுக்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டியில், திமுக…

தேர்தல் ஆணையத்தின் முடிவு எதுவாக இருந்தாலும் வெற்றி என்ற இலக்கை நோக்கி பயணிக்கிறோம்  என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நியூஸ் 7 தமிழுக்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டியில், திமுக ஆட்சியில் ஒரு பணிகளும் நடைபெறவில்லை.அதேபோல் சொன்ன வாக்குறுதிகளும் அவர்கள் நிறைவேற்றவில்லை.எனவே அதை முன்னுறுத்தி இந்த இடைத்தேர்தலில் பிரச்சாரம் செய்வோம் என்று தெரிவித்தார். மேலும் மக்களும் இந்த இடைத்தேர்தலில் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்றும் தேர்தல் ஆணையத்தின் முடிவு அதிமுக தொண்டர்கள் மத்தியில் எந்த குழப்பத்தையும் ஏற்படுத்தவில்லை என்றும் கூறியுள்ளார்.

பாஜகவின் நிலைப்பாடு குறித்து கருத்து தெரிவித்த செங்கோட்டையன், பாஜகவின் முடிவு எதுவாக இருந்தாலும் அதிமுக தனிதன்மை வாய்ந்த இயக்கம். எடப்பாடியாரும் தனித்தன்மை வாய்ந்தவர்.முடிவுகள் எதுவாக இருந்தாலும் அதை நாங்கள் களத்தில் சந்திப்போம் என்று தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், பிரிந்து சென்றவர்கள் தான் மனவேதனை அடைய வேண்டுமே தவிர,நாங்கள் அல்ல. ஆனால் ஒரு பெரிய இயக்கத்தை சிதறடித்து கொண்டிருக்கிறோம் என்று அவர்கள்தான் சிந்திக்க வேண்டும். ஆனால் எங்கே சிதறினாலும், சிதறியது கடுகளவுதான். ஆளுக்கொரு திசையில் இருப்பதை அவர்களும் புரிந்து கொள்ள வேண்டும். பல்வேறு சாதனை படைத்த அதிமுகவை அவர்கள் எந்த மனநிலையில் பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை. களத்திலே நிற்பவர் எடப்பாடியார் தான். எந்த அச்சமும் எங்களுக்கில்லை. தெளிவாக நாங்கள் இருக்கிறோம். வெற்றி என்பதே எங்கள் இலக்கு என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.