பொங்கலுக்கு மேலும் ஒரு நாள் விடுமுறை : பள்ளி கல்வித்துறை வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு

பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 14 முதல் 18 வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழர்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று பொங்கல் திருநாள். இந்த ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் கொண்டாடப்படவுள்ளது. இதனைத் தொடர்ந்து 16 ஆம் தேதி  திருவள்ளுவர் தினமும், 17ஆம் தேதி உழவர் தினமும் கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து ஏராளமான மக்கள் தம் சொந்த ஊர்களுக்கு படையெடுத்துள்ளனர்.

இந்த நிலையில் மக்கள் சொந்த ஊர்களுக்கு வசதியாக செல்லும் வகையில், ஒருநாள் முன்னதாக போகி பண்டிகைக்கும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்பேரில் விடுமுறை அளிக்கப்பட்டதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.