முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

எய்ம்ஸ் குறித்த உண்மையை விளக்க மத்திய அரசு முன்வருமா? – மநீம கேள்வி

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்த உண்மையை விளக்க மத்திய அரசு முன்வருமா? என்று மக்கள் நீதி மய்யம் கேள்வி எழுப்பியுள்ளது.

இதுகுறித்து, மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, 2019-ில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி. மூன்று ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், சாலை, சுற்றுச்சுவரைத் தவிர வேறெந்த கட்டுமானப் பணிகளும் தொடங்கவில்லை. பூர்வாங்கத் திட்டமிடல் பணிகள் இறுதிநிலையை எட்டியுள்ளதாகவும், நிதி ஒதுக்கீடு முழுமையாகக் கிடைக்கப்பெறவில்லை என்றும் சொல்லப்படுகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த விவகாரத்தில், தமிழக மக்களுக்கு உண்மை நிலையை விளக்க மத்திய அரசு முன்வர வேண்டும். எந்தெந்தப் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன, எந்தெந்த பணிகள் நிலுவையில் உள்ளன என்பது குறித்தான தகவலை மத்திய அரசு வெளியிட வேண்டும்.

பாஜகவின் சாதனையாகக் கூறிக்கொள்ளும் எய்ம்ஸ் பெயரில் புனைவுகள்தான் உலவுகின்றன. எனவே, திட்டத்தின் உண்மை நிலை குறித்து வெளிப்படையாக விளக்கி விட்டு, உரிய நிதி ஒதுக்கீடு பெற்றுத்தந்து, கட்டுமானப் பணிகளை விரைந்து முடித்து, மருத்துவமனையைப் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று மநீம வலியுறுத்துகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

உள்ளாட்சித் தேர்தல்; கணக்கை தொடங்கிய தளபதி

Halley Karthik

“நட்டத்தைக் காரணம் காட்டி திட்டங்களைச் சிதைப்பது அரசுக்கு அழகல்ல” – கமல்ஹாசன்

Halley Karthik

மழை மேகங்கள் மறைப்பு: பல இடங்களில் சந்திர கிரகணம் தெரியாததால் மக்கள் ஏமாற்றம்

NAMBIRAJAN