முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு முதலில் வேட்புமனு பெற்றார் சசி தரூர்

காங்கிரஸ் கட்சியில் தேசிய தலைவர் பதவிக்கு அசோக் கெலாட் பெயர் முன்னிலைப்படுத்தி வரும் நிலையில், மூத்த தலைவர் சசி தரூர் முதலில் வேட்புமனுவை பெற்றுள்ளார்.

 

காங்கிரஸ் கட்சியில் மூத்த தலைவர்கள் சிலர் கட்சியில் இருந்து வெளியேறியதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு உள்கட்சி தேர்தல் நடத்தப்படும் என்று கட்சித் தலைமை அறிவித்திருந்தது. அதன்படி, மதுசூதனன் மிஸ்திரி தலைமையில் காங்கிரஸ் மத்திய தேர்தல் குழு அமைக்கப்பட்டது. அக்டோபர் மாதம் 17-ம் தேதி நடைபெற இருக்கும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று (செப்டம்பர் 24) தொடங்கியது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

 

காலை 10 மணிக்கு தொடங்கிய வேட்புமனு தாக்கல் மாலை 4 மணிக்கு நிறைவடைந்தது. வாக்கு எண்ணிக்கை அக்டோபர் மாதம் 19-ம் தேதி தொடங்கி முடிவுகள் அன்றைய தினமே அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ராகுல்காந்தி வருவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், அவர் அதில் இருந்து ஒதுங்கிவிட்டார்.

இதையும் படியுங்கள் : காங்கிரஸ் தேசிய தலைவர் தேர்தல் தொடக்கம்: அசோக் கெலாட் – சசி தரூர் இவர்களில் யார்?

 

பின்னர் நேரு குடும்பதிற்கு நெருங்கியவரான ராஜஸ்தான் முதலமைச்சருமான அசோக் கெலாட் போட்டியிடுவதாக எதிர்ப்பார்க்கப்பட்டது. மேலும் கட்சி தலைமையும் அசோக் கெலாட் தலைவராக வரவேண்டும் என முடிவு செய்திருந்ததாகவும் தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில், கேரளாவை சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்பியுமான சசி தரூர் தலைவர் தேர்தலுக்கு போட்டியிடுவார் என கருதப்பட்டது. அதன்படி அவர் இன்று முதலில் வேட்புமனுவை பெற்றுள்ளார்.

 

அசோக் கெலாட் காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவராக வரவேண்டும் என கட்சியில் மிகுந்த எதிர்ப்பு எழுந்த நிலையில், அவருக்கு எதிராக சசி தரூர் முதலில் வேட்புமனு பெற்றுள்ளது கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, காங்கிரஸ் கட்சியில் 25 ஆண்டுகளுக்கு பிறகு காந்தி குடும்பத்தை சேர்ந்தவர்கள் இல்லாமல் தலைவர் தேர்ந்தெடுக்க போகும் முதல் தேர்தல் இதுவாகும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

 

-இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஹிஜாபோ, காவித்துண்டோ, நீலத்துண்டோ எதுவும் பள்ளிக்கு அணிந்து செல்லக்கூடாது ; குஷ்பூ.

Halley Karthik

1,300 பேரை பணிநீக்கம் செய்யும் ஜூம் நிறுவனம் – ஊழியர்கள் அதிர்ச்சி

Yuthi

போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைப்பு!

Saravana