உ.பி. சட்டசபையில் வீடியோ கேம் விளையாடிய பாஜக எம்எல்ஏ-வீடியோ வெளியிட்ட சமாஜ்வாதி கட்சி

உத்தரப் பிரதேச சட்டசபையில் வீடியோ கேம் விளையாடுவது, புகையிலைப் பயன்படுத்துவது போன்ற செயல்களில் பாஜக எம்எல்ஏக்கள் ஈடுபடுவது போன்ற வீடியோவை சமாஜ்வாதி கட்சி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக சமாஜ்வாதி கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர்…

உத்தரப் பிரதேச சட்டசபையில் வீடியோ கேம் விளையாடுவது, புகையிலைப் பயன்படுத்துவது போன்ற செயல்களில் பாஜக எம்எல்ஏக்கள் ஈடுபடுவது போன்ற வீடியோவை சமாஜ்வாதி கட்சி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக சமாஜ்வாதி கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:

மக்கள் படும் கஷ்டங்கள் குறித்து கேள்விகளை எழுப்பினால் இவர்களிடம் பதில் இல்லை. ஆனால், சட்டசபை பொழுதுபோக்கு மையமாக அவர்களுக்கு மாறியிருக்கிறது. இது அருவருக்கத்தக்கது மற்றும் பயங்கரமானதாகும்.

ஹோபா எம்எல்ஏ ராகேஷ் கோஸ்வாமி வீடியோ கேம் விளையாடுவதை பார்க்க முடியும்.
ஜான்சி தொகுதி எம்எல்ஏ ரவி சர்மா புகையிலை எடுத்துக் கொள்வதையும் நீங்கள் பார்க்க முடியும் என்று சமாஜவாதி அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை கூட்டத் தொடரில் வேலையின்மை மற்றும் விலைவாசி உயர்வு விவகாரம் குறித்து ஆலோசனை நடத்த அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து சமாஜ்வாதி கட்சி வெளிநடப்பு செய்தது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.