மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் கிடைக்குமா? இன்று பிற்பகல் உச்சநீதிமன்றத்தில் விசாரணை!

மதுபான கொள்கை வழக்கில் ஜாமீன் கோரி டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். டெல்லியில் மதுபான கொள்கையை உருவாக்கி அமல்படுத்தியதில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஊழல் தொடர்பாக அந்த மாநில…

மதுபான கொள்கை வழக்கில் ஜாமீன் கோரி டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

டெல்லியில் மதுபான கொள்கையை உருவாக்கி அமல்படுத்தியதில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஊழல் தொடர்பாக அந்த மாநில துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை சிபிஐ அதிகாரிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்தது.
இதனையடுத்து, மணீஷ் சிசோடியா, டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது மணீஷ் சிசோடியாவிடம் கூடுதல் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சிபிஐ கோரிய நிலையில், அதனை ஏற்றுக்கொண்டு அவருக்கு 5 நாட்கள் சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.


இந்த நிலையில், ஜாமீன் கோரி மணீஷ் சிசோடியா சார்பில் உச்சநீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டது. மணீஷ் சிசோடியா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏம்.எம்.சிங்வியின் கோரிக்கையை ஏற்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திசூட் தலைமையிலான அமர்வு ஜாமீன் மனுவை இன்று மாலை 3.50 மணிக்கு விசாரிக்க ஒப்புக்கொண்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.