முக்கியச் செய்திகள் தமிழகம்

மதுரையில் தப்பியோடிய ரவுடியை சுட்டுப்பிடித்த போலீசார்

மதுரை மாவட்டத்தில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி, போலீசாரை தாக்கி விட்டு தப்பியோட முயற்சி செய்த போது துப்பாக்கிச்சூடு நடத்தி பிடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை  வளர்நகர் அருகே ராஜிவ்காந்தி நகர் பகுதியில் கடந்த 22ம் தேதி உலகனேரியை சேர்ந்த பாலமுருகன் என்ற டோராபாலா கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த வழக்கினை மாட்டுத்தாவணி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதையும் படிக்கவும்: மரவள்ளி கிழங்கு டன்னுக்கு ரூ.1500 உயர்வு; விவசாயிகள் மகிழ்ச்சி

இந்த கொலை வழக்கு தொடர்பாக வினோத், மாரி, விஜயராகவன், சூர்யா, ஜெகதீஸ்வரன் 5 பேரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இதில் வினோத் என்பவர் மீது ஏற்கனவே மதுரையில் உள்ள காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.இதில், முக்கிய குற்றவாளியான வண்டியூரைச் சேர்ந்த ரவுடி வினோத்தை, போலீசார் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது வினோத் போலீசாருக்கு அடையாளம் காட்டி கொண்டிருந்த போது திடீரென அங்கு பதுக்கி வைத்திருந்த அரிவாளை எடுத்து காவலரை வெட்ட முயன்றுள்ளார்.

இதனையடுத்து அங்கு பணியில் இருந்த ஆய்வாளர், ரவுடி வினோத்தின் காலில் சுட்டுப் பிடித்தார். காயமடைந்த வினோத்தை போலீசார், அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவல்துறையினரை வெட்ட முயன்ற ரவுடியை துப்பாக்கிச்சூடு நடத்தி பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram