தென்கொரியாவில் கட்டுங்கடங்காமல் பரவிய காட்டுத்தீ – 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வெளியேற்றம்

தென்கொரியாவில் கட்டுங்கடங்காமல் பரவிய காட்டுத்தீயால் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வெளியேற்றப்பட்டன. தென்கொரியாவின் கேங்கனியூங் பகுதியில் உள்ள வனத்தில் திடீரென தீப்பற்றியது. அப்பகுதியில் வீசிய பலத்த காற்று காரணமாக அருகில் இருந்த மற்ற வனப்பகுதிகளுக்கும் காட்டுத்தீ …

தென்கொரியாவில் கட்டுங்கடங்காமல் பரவிய காட்டுத்தீயால் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வெளியேற்றப்பட்டன.

தென்கொரியாவின் கேங்கனியூங் பகுதியில் உள்ள வனத்தில் திடீரென தீப்பற்றியது. அப்பகுதியில் வீசிய பலத்த காற்று காரணமாக அருகில் இருந்த மற்ற வனப்பகுதிகளுக்கும் காட்டுத்தீ  மளமளவென பரவியது.

இதையடுத்து சுற்றுவட்டாரப் பகுதியில் வசிக்கும் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். இந்த தீ விபத்தில் 420 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்களும் 10க்கும் மேற்பட்ட கட்டடங்களும் சேதமடைந்த நிலையில், 3 பேர் காயமடைந்தனர்.

நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் பலமணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். கிட்டத்தட்ட 6 ஹெலிகாப்டர்கள் மூலம் தீயை அணைக்கும் முயற்சி தீவிரப்படுத்தப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.