உயிரிழந்த குட்டியின் அருகே பாசப்போராட்டம் நடத்திய யானைகள்..!

மேட்டுப்பாளையம் அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்த யானைக்குட்டியின் அருகே முகாமிட்டு, யானைக்கூட்டம் பாசப்போராட்டம் நடத்திய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. கோவை மாவட்டம் பாலமலை அடிவாரப்பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பிற்கு ஒரு வாரத்திற்கு…

மேட்டுப்பாளையம் அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்த யானைக்குட்டியின் அருகே முகாமிட்டு, யானைக்கூட்டம் பாசப்போராட்டம் நடத்திய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

கோவை மாவட்டம் பாலமலை அடிவாரப்பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பிற்கு ஒரு வாரத்திற்கு முன்பு, தண்ணீர் தேடி ஒரு யானைக்குட்டி சென்றுள்ளது. அப்போது தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து உயிரிழந்ததாக தெரிகிறது. இந்நிலையில், தாய் யானையுடன் வந்த யானைக்கூட்டம் தண்ணீர் தொட்டி அருகே நின்று பாசப்போராட்டம் நடத்தின.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பாலமலை அடிவார பகுதியில் நடிகர்
சத்தியராஜின் சகோதரி பங்களாவில் உள்ள தண்ணீர் தொட்டியில் விழுந்து குட்டியானை
ஒன்று உயிரிழந்துள்ளது

யானை உயிரிழந்து ஒரு வாரம் இருக்கும் என்ற நிலையில் அந்த யானையை கூட்டி செல்ல
தாய் யானையுடன் பிற யானைகளும் கூட்டமாக வந்து அந்த தண்ணீர் தொட்டி அமைந்துள்ள பங்களாவில் முகாமிட்டு காத்திருக்கும் சம்பவம் யானைகளின் பாச போராட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது

உயிரிழந்த யானை குட்டியை தொட்டியில் இருந்து வெளியே எடுக்க வனத்துறையினர் அந்த பகுதியில் இருந்து திட்டமிட்டு கொண்டிருந்த சமயத்தில் 10காட்டுயானைகள் அங்கு
வந்தது. யாரையும் விரட்டியடிக்காமல் தாய் யானையுடன் வந்த யானை கூட்டம் கால் உயிரிழந்த  குட்டி தண்ணீர் தொட்டியில் இருந்து மீண்டும் எழுந்து வரும் என்ற நம்பிக்கையில் வெகு நேரமாக அங்கேயே முகாமிட்டு காத்திருந்தது சோகத்தையும் யானைகளின் பாசத்தையும் வெளிப்படுத்தும் விதமாக அமைந்தது

இதனையடுத்து முகாமிட்ட காட்டு யானைகளை வனத்துறையினர் டார்ச்சு லைட்டுகள்
அடித்து வனப்பகுதிக்குள் அனுப்பிவைத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.