விளைநிலங்களுக்குள் புகுந்த காட்டு யானைகள் – வாழை மரங்கள் சேதம்!

மேட்டுபாளையம் அருகே குரும்பனுாரில் உள்ள விளைநிலங்களில் காட்டு யானைகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே குரும்பனுார் பகுதியை சேர்ந்தவர் நஞ்சுண்டப்பன் மகன் ராஜ்குமார் (50). இவர்…

மேட்டுபாளையம் அருகே குரும்பனுாரில் உள்ள விளைநிலங்களில் காட்டு யானைகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே குரும்பனுார் பகுதியை சேர்ந்தவர் நஞ்சுண்டப்பன் மகன் ராஜ்குமார் (50). இவர் வாழை விவசாயம் அப்பகுதியில் செய்து வருகிறார். இதனை தொடர்ந்து இரு தினங்களாக வனப்பகுதியிலிருந்து வரும் காட்டு யானைகள் அவரின் வாழை தோட்டத்திற்குள் புகுந்து பயிரிடப்பட்ட வாழை மரங்களை சேதப்படுத்தி கீழே தள்ளி காய்களை மதித்து செல்கிறது.

இதேபோல் செல்வகுமார் என்பவரது தோட்டத்திலும் நுழைந்த அதே காட்டு யானை கூட்டம் அங்கிருந்த 100-க்கும் மேற்பட்ட வாழை மரங்களை சேதப்படுத்தியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் விவசாயம் செய்ய முடியாமல் அச்சத்தில் உள்ளனர். இதற்கு வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து வனப்பகுதியிலிருந்து யானைகள் வெளியே வரமால் இருக்க அகழிகள் அமைத்து தடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

அனகா காளமேகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.