கோமாளி’ திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். தொடர்ந்து இவர் ‘லவ் டுடே’ திரைப்படம் மூலம் கதாநாயகனாகவும் உயர்ந்தார். அவரே இயக்கிய இப்படம், 100 கோடி வரை வசூலித்து அசத்தியது. இவர் நடிப்பில் அடுத்தடுத்து வெளியான ‘டிராகன்’, ‘லவ் டுடே’ ஆகிய திரைப்படங்களும் 100 கோடி கிளப்பில் சேர்ந்தன.
இறுதியாக பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே திரைப்படம் வெளியாகி இருந்தது. விக்னேஷ் சிவன் இயக்கியிருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.
இந்த நிலையில் பிரதீப் ரங்கநாதனின் அடுத்த திரைப்படம் குறித்த அப்டேட் நாளை (ஜூலை 6) காலை 10 மணிக்கு வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவரது எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள போஸ்டரில் “NEXT WAVE STARTS JULY 6TH 10AM” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதீப் ரங்கநாதன் தனது அடுத்த திரைப்படத்தை ‘லல் டுடே’ போல தானே இயக்கி நடிக்க உள்ளதாகவும் இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.




